×

வட தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்: 2 இடங்களில் 111 டிகிரி வெயில்

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, வெப்பத்தின் அளவும் அதிகரித்து வருகிறது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப் பகுதிகளில் இயல்பைஒட்டி இருந்தது. இருப்பினும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசியது. அதன் தொடர்ச்சியாக ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நேற்று 111 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இந்த இடங்களில் மட்டும் இயல்பைவிட +6.7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. மேலும், மதுரை விமான நிலையம், திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, வேலூர் 108 டிகிரி கொளுத்தியது. பாளையங்கோட்டை, சேலம் 106 டிகிரி, தஞ்சாவூர் 104 டிகிரி, தர்மபுரி, சென்னை 102 டிகிரி, கோவை, கடலூர், பரங்கிப்பேட்டை 100 டிகிரி வெயில் நிலவியது. இது தவிர 14 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் நிலவியது.

இதற்கிடையே, தமிழகப் பகுதிகளின்மேல் வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக இன்றும் நாளையும் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. 8ம் தேதியில் நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

வெப்பநிலையை பொருத்தவரையில், உள் மாவட்டங்களில் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 3 நாள்களுக்கு அதிபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையும் வாய்ப்பும் உள்ளது. ஒரு சில இடங்களில் 2-4 செல்சியஸ் வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக வட தமிழக உள் மாவட்டங்களில் 5 நாட்களுக்கு சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்்களில் 111 டிகிரி வரை இருக்கும் . இதர சமவெளிப் பகுதிகளில் 104 டிகிரி இருக்கும். அதனால் இன்றும் நாளையும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசும்.

The post வட தமிழகத்தில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசும்: 2 இடங்களில் 111 டிகிரி வெயில் appeared first on Dinakaran.

Tags : North Tamil Nadu ,Chennai ,Kaitri Weil ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் 12ம் தேதி வரை கோடை மழை...